×

சூப்பர் ஸ்டாராக வருவார் சுப்மன் கில்: வாசிம் ஜாபர் பேட்டி

வங்கதேசத்தில் டிசம்பர் 7 ஆம் தேதி நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ஏற்பட்ட கட்டைவிரல் காயம் காரணமாக கேப்டன் ரோஹித் ஷர்மா வெளியேறியதை அடுத்து, இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த அரிய வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். 2020 இல் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பாக்சிங் டே டெஸ்டின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சுப்மன், 152 பந்துகளை சந்தித்து 110 ரன்களை குவித்தார்.

இதில் 10 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களும் அடக்கம். இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் அபாரமாக ஆடி சதம் அடித்தார். இதனை மாஜி வீரர் வாசிம் ஜாபர் பாராட்டி உள்ளார். அவர் கூறுகையில், பஞ்சாபை சேர்ந்த இளம் வீரரான சுப்மன்கில் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் பேட்டராக இருப்பார். அதற்கான அத்தனை திறமையும் அவரிடம் உள்ளது’’ என்றார். வாசிம் ஜாபர். 31 டெஸ்ட் போட்டிகளில் 58  இன்னிங்ஸ் ஆடி 1944 ரன்களை குவித்தவர். 5 சதத்தில் 2 இரட்டை சதமும்  விளாசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Subman Gill ,Wasim Zafar , Subman Gill Will Be a Superstar: Wasim Zafar Interview
× RELATED ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது...